News
“அக நக அக நக” பொன்னியின் செல்வன்-2 படத்தின் முதல் பாடல் அறிவிப்பு…
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ள நிலையில், படத்தின் முதல் சிங்கிளான ‘அக நக’ பாடல் மார்ச் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார்.
மேலும், இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த அறிவிப்பு போஸ்டரில் த்ரிஷா குந்தவையாக வாளுடன் நிற்பது போலவும், கார்த்தியின் வந்தியத்தேவன் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மண்டியிட்டபடியும் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியிடப்படுகிறது.
Get ready to experience the magic of #AgaNaga in all its glory! 20th March. 6 PM. Stay tuned!
🎤 @ShakthisreeG
✍🏻 @ilangokrishnan #PS2 #PonniyinSelvan #CholasAreBack #ManiRatnam @arrahman @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN pic.twitter.com/tfUqkAXD9Y— Madras Talkies (@MadrasTalkies_) March 17, 2023
மணிரத்னம் இயக்கிய இப்படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் சாதனை படைத்தது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர். சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் மற்றும் ஆர் பார்த்திபன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இதையும் படிங்களேன் – #Bikili: நடிகர் விஜய் ஆண்டனி அறிமுகம் செய்த கெட்ட வார்த்தை பாடல்.!
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் பேனர்களின் கீழ் தயாரிக்க, படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
