Celebrities
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டியை ரசிக்கும் ரஜினிகாந்த்.!
மும்பையில் நடைபெற்று வரும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் கண்டு கழித்து வருகிறார்.
மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் காலேவின் அழைப்பின் பேரில் சூப்பர் ஸ்டார், முதல் ஒருநாள் போட்டியைப் பார்க்க ஒப்புக்கொண்டார். மேலும், அங்கு செய்தியாளர்களிடம் பேசிய எம்.சி.எஸ் தலைவர், நடிகர் ரஜினிகாந்தை அழைத்ததாகவும், சூப்பர் ஸ்டார் வான்கடே மைதானத்திற்கு வருகை தந்தால் அது மிகப்பெரிய கவுரவமாக இருக்கும் பேசியுள்ளார்.
ரஜினிகாந்த் கடைசியாக 2011 உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை மும்பையில் நேரடியாகப் பார்த்தார். அதன் பின், இப்போது கண்டு மகிழ்ந்து வருகிறார். ரஜினிகாந்த் ஒரு கிரிக்கெட் பிரியர், ஆனால் அவரது பிஸியான படப்பிடிப்பு காரணமாக மைதானத்தில் போட்டியைப் பார்க்க அவருக்கு நேரம் கிடைப்பதில்லை.
தற்போது, ரஜினிகாந்த் இன்று தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் ஒருநாள் போட்டியைக் காண மும்பைக்கு வந்துள்ளார். இதற்கிடையில், நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படமான ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 80% நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும்.
