News
பதான் OTT ரிலீஸ் எப்போது? ரூ.1000 கோடி வசூல் செய்து மகத்தான சாதனை.!
நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கான் நடித்த “பதான்” திரைப்படம் வெளியாகியுள்ளதால், அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியதைக் குறித்தது. பதான் திரைப்படம் ஜனவரி 25 அன்று வெளியானதிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்டு வருகிறது.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் வசூலில் ரூ.1000 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. இப்பொது, படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், இன்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அந்த தகவலின்படி, ஏப்ரல் 25ம் தேதி தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் பதான் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்களேன் – புஷ்பா 2 அப்டேட்…சமந்தாவுக்கு பதில் கவர்ச்சி நடனம் ஆட போகும் டாப் நடிகை.?
இதற்கிடையில், பதான் படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஷாருக்கான் அட்லீயின் ஜவான், படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வரும் படம் ‘ஜவான்’. படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
