News
1500 கோடி சொத்து…60 வயது நடிகரை திருமணம் செய்ய இதுதான் காரணம்.! பவித்ராவின் முன்னாள் கணவர் வேதனை.!
தெலுங்கு நடிகர் நரேஷ் (60) நடிகை பவித்ரா லோகேஷ் (44) இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். இது நடிகர் நரேஷ்க்கு 4-வது திருமணம். அதைபோல் பவித்ரா லோகேஷ்க்கு இது 3-வது திருமணம். இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலிப்பதாக லிப் லாக் வீடியோ ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார்கள்.

Pavitra Naresh [Image Source: Twitter]
இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாகவே லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தும் வந்துள்ளனர். அதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டார்கள். அதற்கான வீடியோக்களும், புகைப்படங்களையும் தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் வெளியீட்டு இருந்தார்கள்.

Naresh Pavitra married [Image Source: Twitter]
இந்நிலையில் தற்போது நடிகை பவித்ரா லோகேஷின் முன்னாள் கணவர் சுசேந்திர பிரசாத் என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” பவித்ரா ஒரு சுயநல வாதி. அவருடைய மனதில் எப்போதும் வசதியாக வாழவேண்டும் என்று எண்ணம் இருந்துகொண்டே இருக்கும்.

Pavitra Lokesh [Image Source: Twitter]
எனவே, வசதியாக வாழ வேண்டும் என நரேஷிடம் இருக்கும் 1500 கோடி பணத்திற்காக தான் அவர் இந்த திருமணம் செய்து இருக்கிறார். நரேஷ் மிகவும் பணக்காரர் என்பதால் மட்டும் தான் அவர் அவரை திருமணம் செய்துள்ளார். இது மிகவும் மோசமான செயல் பவித்ரா ஒரு சந்தர்ப்பவாதி” என கூறியுள்ளார்.
