Gossips
2 படம்… 20 கோடி சம்பளம்…எல்லாம் போச்சு…கடும் வருத்தத்தில் நயன்தாரா.!
நடிகை நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Nayanthara [Image Source: Twitter]
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா அடுத்ததாக ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகி இருந்தாராம். 2 திரைப்படத்திற்கு சேர்ந்து நயன்தாராவுக்கு 20 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம், அதற்கான சிறிய முன் தொகையும் கொடுத்துள்ளார்களாம்.

Nayanthara [Image Source: Google ]
ஆனால், தற்போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக நயன்தாரா அந்த இரண்டு படங்களையும் சிறிது காலம் கழித்து நடித்து கொடுப்பதாக கூறியுள்ளாராம். இதனால் அந்த தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டு நயன்தாராவுக்கு கொடுத்த முன் தொகையையும் பெற்றுக்கொண்டு விட்டதாம்.
இதையும் படியுங்களேன்- பருத்திவீரன் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

nayanthara [Image Source: Google]
எனவே 2 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும், 20 கோடி பணமும் போச்சு என நயன்தாரா தற்போது மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம். மேலும் ஏற்கனவே , நயன்தாரா தனது இரண்டு குழந்தைகளை பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக நடிப்பதை நிறுத்த போகிறார் எனவும் கோலிவுட் சினிமாவில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
