தியேட்டரில் ரசிகர்களை பதம் பார்த்த 2022 பிளாப் லிஸ்ட் படங்கள்…!
சினிமாவில் பொதுவாக எந்த திரைப்படமும் தோல்வியை அடைந்துவிடும் என்று நினைத்து எடுக்கப்பட்டாது. சில சூழ்நிலையால் சில படங்கள் தோல்வியை சந்தித்து விடுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு பல படங்கள் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை அடைந்துள்ளது.
இதையும் படியுங்களேன்- அன்பு மனைவி நயன்தாராவுக்கு ஆசை கணவர் விக்கி கொடுத்த பரிசு என்ன தெரியுமா..?
அந்த வகையில், இந்த 2022-ஆம் ஆண்டு வெளியான படங்களில் அதில் நடித்த ஹீரோக்களின் ரசிகர்களே இந்த படத்தை எடுக்காமல் இருந்திருக்கலாம் என்கிற அளவிற்கு தோல்வியை சந்தித்த டாப் 10 படங்களை பற்றி பார்க்கலாம்.
1.பிரின்ஸ்

Prince Movie Poster [Image Source: Twitter]
டான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்த்து காத்திருந்த “பிரின்ஸ் ” திரைப்படம் காமெடியே இல்லாத காரணத்தால் மிகப்பெரிய எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து. படத்தை பார்த்த பலரும் எதற்காக சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடித்தார் என்கிற அளவிற்கு விமர்சனங்களை கூறினார்கள்.
2.கோப்ரா

cobra [Image Source: Twitter]
நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோப்ரா. இந்த படத்திற்காக நடிகர் விக்ரம் பல கெட்டப்கள் போட்டு தனது கடின உழைப்பை கொடுத்திருப்பார். ஆனால், படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்ற காரணத்தால் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
3.டி.எஸ்.பி

DSP releasing [Image Source: Twitter]
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த மாதம் திரையரங்களில் வெளியான திரைப்படம் டி.எஸ்.பி. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
4.காஃபி வித் காதல்

Coffee With Kadhal [Image Source: Google]
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “காஃபி வித் காதல் “. சுந்தர் சி படம் என்பதால் காமெடி இருக்கும் என எதிர்பார்த்து படத்திற்கு சென்ற ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம் தான் என்றே கூறலாம். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், படுதோல்வியை சந்தித்தது.
5.நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

Naai Sekar Returns Movie [Image Source: Google]
வடிவேலு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் கேம்பேக் கொடுப்பார் நம்மளை சிரிக்க வைப்பார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தான் கொடுத்தார். படத்தில் அந்த அளவிற்கு காமெடி சரியாக இல்லாத காரணத்தால் படம் தோல்வியை சந்தித்தது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 8 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
6.கேப்டன்

ARYA – CAPTION [Image Source: Google]
ஹாலிவுட் லெவலுக்கு எடுக்க நினைத்து பல கோடி பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்ட திரைப்படம் கேப்டன். ஆர்யா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. வசூல் ரீதியாகவும் படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது.
7.வீரமே வாகை சூடும்

Veeramae Vaagai Soodum [Image Source: Google]
நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் து பா சரவணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “வீரமே வாகை சூடும்”. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கதை சரியில்லாத காரணத்தால் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், படு தோல்வியை சந்தித்து.
8.தி லெஜண்ட்

The Legend [Image Source: Google]
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் அண்ணாச்சி ஹீரோவா நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் “தி லெஜண்ட்”. இந்த திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை விட, எதிர்மறையான விமர்சனங்களை தான் அதிகமாக சந்தித்து. 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 16 கோடி வசூல் செய்தது.
9. என்ன சொல்ல போகிறாய்

Enna Solla Pogirai [Image Source: Google]
நடிகர் அஸ்வின் முதலில் நடிக்கும் படம் என்பதால் என்ன சொல்ல போகிறாய் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படத்தின் திரைக்கதை சரியில்லாத காரணத்தால் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிக்பெரிய தோல்வியை சந்தித்தது.
10. குருதி ஆட்டம்

Kuruthi aattam [Image Source: Google]
நடிகர் அதர்வா நடிப்பில் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான அதிரடி ஆக்சன் திரைப்படம் குருதி ஆட்டம். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக 2 கோடிகள் மட்டுமே செய்துள்ளதால் வசூல் ரீதியாக தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.
