News
‘அலைபாயுதே’ திரைப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவு.!
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் மாதவன் மற்றும் ஷாலினி அஜீத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் காதல் கலந்த காமெடி திரைப்படம் அலைபாயுதே. இப்படம் ஒரு அது ஒரு காதல் கதையை கொண்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியது.
நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் அறிமுகமான படம் அலைபாயுதே. நேற்று ஏப்ரல் 13-ம் தேதி, நடிகர் மாதவன் நடித்த ‘அலைபாயுதே’ திரைப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நடிகர் மாதவன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.
இப்படம் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால், இப்படத்தின் போஸ்டரைப் பகிர்ந்துள்ள மாதவன், “என்ன ஒரு மறக்க முடியாத பயணம், ஆசீர்வதிக்கப்பட்ட பயணம், மற்றும் நினைவுகள் இன்னும் புதியது என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
இதற்கிடையில், படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தின் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. அந்த ஆண்டு இந்தப் படத்துக்காக நடிகை ஷாலினிக்கு மாநிலத் திரைப்பட விருதும் கிடைத்தது.
