News
விஜய் கூட 4 படம்…அஜித் கூட 1 படம் மிஸ் ஆயிடுச்சு..நடிகை மீனா வேதனை.!!
நடிகை மீனா ஆரம்ப காலகட்டத்தில் ரஜினி, கமலுடன் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், விஜய்க்கு ஜோடியாக முழுவதுமாக ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்தது இல்லை. மீனா அஜித்துடன் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால். விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டது உண்டு. ஆனால், அது நடக்கவே இல்லை. ஆனால் விஜய்யுடன் மீனா ஒரே ஒரு பாடலில் மட்டும் நடனம் ஆடியுள்ளார்.

meena ajith vijay [Image Source : File Image ]
ஆனால், முழுவதுமாக ஒரு திரைப்படத்தில் தனி ஹீரோயினாக அவர் நடித்ததே இல்லை. இதனையடுத்து, சமீபகாலமாக படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் மற்றும் சில வெப் தொடர்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மீனா விஜயுடன் பல படங்கள் மிஸ் ஆனதாகவும், அஜித்துடன் 1 படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.

meena [Image Source : File Image ]
இது குறித்து பேசிய நடிகை மீனா ” எனக்கு அந்த சமயத்தில் பல படங்களில் நடித்துவந்தேன். அந்த சமயத்தில் விஜய் அஜித் உடன் நடிக்கும் வாய்ப்பும் எனக்கு வந்தது. ஆனால் தேதி பிரச்சனை காரணமாக அவர்களுடன் நடிக்கமுடியாமல் போய்விட்டது. ஏனென்றால், அந்த சமயத்தில் நான் எல்லா மொழிகள் படங்களிலும் நடித்து வந்தேன்.

sarakku vachirukken song meena and vijay [Image Source : File Image ]
இதன் காரணமாகவே விஜய் கூட ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கமுடியாமல் போய்விட்டது. கிட்டத்தட்ட விஜய்யுடன் படத்தில் நடிக்க எனக்கு 4 படங்களில் வாய்ப்பு வந்தது. ஆனால், என்னால் நடிக்கமுடியவில்லை, அதுபோலவே அஜித்துடன் வாலி திரைப்படத்தில் நான் நடிக்கவேண்டியது.
இதையும் படியுங்களேன்- காதலியை கடத்திய நடிகர் விமல்.? களவாணி படத்தை போல நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவம்.!!

meena and ajith [Image Source : File Image ]
வாலி படத்தின் வாய்ப்பும் எனக்கு தேதி பிரச்சனை காரணமாக மிஸ் ஆகிவிட்டது. அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது வருத்தமாக இருக்கிறது என கூறியுள்ளார். மேலும், மீனா அஜித்துடன் வாலி, சீட்டிசன், ஆனந்த பூங்காற்றே ஆகிய திரைப்படங்களும் விஜய்யுடன் யூத் படத்தில் ஒரே ஒரு சரக்கு வச்சிருக்கேன் பாடலில் கவர்ச்சியாக நடனம் ஆடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
