Connect with us

News

50-வது நாள் இமாலய வெற்றி…OTT-யில் வெளியாகியும் திரையரங்குகளில் மாஸ் காட்டும் ‘லவ் டுடே’..!

50-வது நாள் இமாலய வெற்றி…OTT-யில் வெளியாகியும் திரையரங்குகளில் மாஸ் காட்டும் ‘லவ் டுடே’..!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் 4-ஆம் தமிழில், தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் இப்போது இருக்கும் காலகட்டத்து காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

LoveToday

LoveToday [Image Source: Google]

தமிழில் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் படத்தை டப் செய்து வெளியிட்டனர். அங்கேயும் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது படம் வெளியாகி இன்றுடன் 50-வது நாட்களை கடந்துள்ளது.

இதையும் படியுங்களேன்- கலர்ஃபுல் உடையில் கவர்ச்சி விருந்து வைத்த பிக் பாஸ் பிரபலம்.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

LoveToday 50 th day

LoveToday 50 th day [Image Source: Google]

திரையரங்குகளை தொடர்ந்து படம் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது. அப்படி இருந்தும் கூட இன்னும் படம் தமிழகத்தில் உள்ள சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஏஜிஎஸ் ஏன்டர்டெய்மென்ட் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லவ் டுடே பாக்ஸ் ஆபிஸ்

5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த ‘லவ் டுடே ‘திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 80 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

Continue Reading
To Top