News
அந்த மாதிரி கேள்வி கேட்ட ரசிகர்…அசால்ட்டாக பதில் கொடுத்த ‘ஸ்ருதிஹாசன்’..!
நடிகை நடிகை ஸ்ருதிஹாசன்தெலுங்கில் கடைசியாக ‘வால்டர் வீரையா’ மற்றும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். கடந்த இரண்டு வருடங்களாக அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதால் ரசிகர்களின் மனதில் எப்போது ஒரே போலவே இருக்கிறார்.

Shruti Haasan in black dress [Image Source : instagram]
இந்நிலையில், எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஸ்ருதிஹாசன் புகைப்படங்களையும். வீடியோக்களையும் வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், இவர் நேற்று இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் ஒரு கேள்வி பதில் அளித்து வந்தார்.

Shruti Haasan [Image Source : instagram]
ரசிகர்கள் தன்னிடம் வேடிக்கையான கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும் என்று நடிகை குறிப்பிட்டுள்ளார். ரசிகர் ஒருவர், ‘உங்களுடன் டேட்டிங் செல்ல ஆசையாக இருக்கிறது? வாய்ப்பு கிடைக்குமா?’ என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஸ்ருதி ‘முடியாது’ என்று தெரிவித்தார். இதே போல பல ஏடாகூட கேள்விகளுக்கு ஸ்ருதி வெகு கூலாக பதிலளித்துள்ளார்.

Shruti Haasan [Image Source: Google]
இதைப்போல சமீபத்தில் மற்றோரு ரசிகரும் விஸ்கி, பீர் மற்றும் காக்டெய்ல் ஆகியவற்றிற்கு இடையே மதுபானத்தை தேர்வு செய்யும்படி கேட்டார். அதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன் “நான் மதுவைத் தொடுவதில்லை, இவை எதுவும் எனக்குப் பிடித்தவை அல்ல” என பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
