Connect with us

News

பிறந்தநாள் பரிசாக ஆண்ட்ரியாவின் புதுப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!

பிறந்தநாள் பரிசாக ஆண்ட்ரியாவின் புதுப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!

நடிகை ஆண்ட்ரியா, நயன்தாராவின் ‘அறம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கோபி நயினார் இயக்கத்தில் ‘மனுசி’ என்ற தனது புது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் நிறைவடைந்த நிலையில், தற்போது ஆண்ட்ரியா ஜெர்மியா நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

Andrea in Manusi Movie

Andrea in Manusi Movie [Image Source: Twitter]

ஆண்ட்ரியா இன்று, தனது 37 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சூர்யா, மனுசி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களைப் பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா, மனுசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளளார். இந்த படத்தை, வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி, பி4யு என்டர்டெயின்மென்ட் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்துள்ளனர். ஆண்ட்ரியாவின் முந்தைய படமான அனல் மெலி பனி துளியும் வெற்றிமாறனால்தான் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்களேன் – Video: 30 வயதில் வில் அம்பு போல் உடலை வளைத்து யோகாவில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்.!

Andrea in Manusi Movie

Andrea in Manusi Movie [Image Source: Twitter]

தற்போது வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரில், ஆண்ட்ரியா ஒரு சிறை அறைக்குள் விசாரணை செய்யும் அதிகாரியின் முன் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது. அடுத்த போஸ்டரில் அவர் தனது அறையிலிருந்து வெளியே எட்டிப்பார்க்கிறார், எதோ ஒரு ஆபத்தில் சிக்கி இருக்கிறார் மட்டும் தெளிவாக தெரிகிறது.

AndreaJeremiah

AndreaJeremiah [Image Source: Twitter]

இந்தத் படத்தைத் தவிர, மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த பிசாசு 2 திரைப்படம் ஆண்ட்ரியா கையில் உள்ளது. இது போக, மாலிகை, கா மற்றும் நோ என்ட்ரி போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Continue Reading
To Top