News
2வது உலக சுற்று பயணத்துக்கு “பரஸ்பர மரியாதை பயணம்” என பெயரிட்ட அஜித் குமார்.!
நடிகர் அஜித் ஒரு பைக் பிரியர் என்பதால், அடிக்கடி வெளி ஊர் மற்றும் வெளி நாடு பயணம் செல்வது வழக்கம். அந்த வகையில், அஜித் குமார் 2021-ல் இந்தியாவில் இருந்து தனது பைக் பயணத்தைத் தொடங்கினார். பின்னர், அவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றார்.
அதன் பிறகு, துணிவு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். துணிவு படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த பிறகு மீண்டும் இந்தியாவில் பைக் பயணத்தை தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக, துணிவு படக்குழுவினரான நடிகை மஞ்சு வாரியாரும் அவருடன் லடாக் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர்கள் சென்ற பைக் ரைட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனது உலகச் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சவாரி செய்து முடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, பைக்கில் உலகத்தை சுற்றி வர திட்டமிட்டார். அவர் முதலில் இந்திய பயணத்தை நிறைவு செய்த பிறகு 2023ல் அவர் வெளிநாட்டிற்குச் செல்லவும் திட்டமிட்டார். இதன் அறிவிப்பும் கடந்த ஆண்டு வெளியானது. இருப்பினும், அவரது 62 திரைப்படம் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. படத்தின் கதைக்களம் மற்றும் நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.
இதையும் படிங்களேன் – ‘தி லெஜெண்ட்’ படத்திற்கு பயங்கர டிமாண்ட் இருந்தது…இயக்குநர் ஜே.டி ஓபன் டாக்.!
தற்போது, அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் “ஏகே 62′ படத்துக்கு பிறகு அஜித், தனது 2வது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவித்துள்ளார். மேலும், அந்த சுற்று பயணத்திற்கு “பரஸ்பர மரியாதை பயணம்” என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது.
— Suresh Chandra (@SureshChandraa) March 6, 2023
