News
நிறைய வாய்ப்பு வருது…ஆனா நடிக்க போக முடியல…கதறி கண்ணீர் விடும் பாவா லட்சுமணன்.!!
நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் பாவா லட்சுமணன். இவர் ஒரு படத்தில் பேசும் வாமா மின்னல் வசனம் இன்றுவரை மாற்றமுடியாத ஒரு வசனமாக இருக்கிறது. இந்நிலையில், தொடர்ச்சியாக நல்ல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாவா லட்சுமணன் நீரிழவு நோயினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

Bava Lakshmanan [Image Source : File Image ]
இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பாவா லட்சுமணனின் கால் கட்டை வீரல் நீரிழவு நோயினால் நீக்கம் செய்யப்பட்டது. அவர் தற்போது சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உதவி செய்ய யாருமில்லை என்ற காரணத்தால் பல சின்னத்திரை நடிகர்களும், பல வெள்ளித்திரை நடிகர்களும் அவருக்கு உதவித்தொகை, மருத்துவ செலவு என பல உதவிகளை செய்துகொடுத்து வருகிறார்கள்.

bava lakshmanan [Image Source : File Image ]
இந்நிலையில், மருத்துவமனையில், சிகிச்சை பெற்றுவரும் பாவா லட்சுமணன் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியதாவது ” மனோபாலா, மயில்சாமி, விவேக் இவர்கள் மூன்று பேர் இருந்த வரை எனக்கு எந்த கவலையும் இல்லாமல் இருந்தது. எனக்கு எதுவும் உதவி தேவைப்பட்டால் உடனடியாக செய்துவிடுவார்கள். அவர்கள் இல்லாதது வருத்தமாக இருக்கிறது.

bava lakshmanan [Image Source : File Image ]
எனக்கு இப்படி ஆனது தெரிந்ததும் உடனடியாக இயக்குனர் விக்ரமன் தான் என்னை தேடி வந்து எனக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு அவரால் முடிந்த பண உதவியை செய்தார். அவரை போலவே பல நடிகர்கள் உதவி செய்து வருகிறார்கள். இப்போது பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு வருகிறது. ஆனால், என்னால் நடிக்கமுடியவில்லை.

Bava Lakshmanan [Image Source : File Image ]
ஏனென்றால், மருத்துவர்கள் என்னை 3 மாதங்கள் ஓய்வெடுக்க கூறியிருக்கிறார்கள். சரியாக 3 மாதங்கள் ஆகும். அதுவரை எனக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் சில தெரிந்த நண்பர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்” என கண்ணீருடன் பேசியுள்ளார். அவர் பேசியதை பார்த்த ரசிகர்களும் மனமுடைந்து ஐயோ கடவுளே நல்ல நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா..? என வருத்தப்பட்டு வருகிறார்கள்.
