News
நடிகர் மற்றும் இயக்குனரான சதீஷ் கௌசிக் காலமானார்.!
பழம்பெரும் நடிகரும் இயக்குனருமான சதீஷ் கௌசிக் தனது 66வது வயதில் காலமானார்.
நடிகரும் திரைப்பட இயக்குனருமான சதீஷ் கௌசிக் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 66, அவர் மறைந்த துரதிர்ஷ்டவசமான செய்தியை அவரது நெருங்கிய நண்பரும் பாலிவுட் நடிகருமான அனுபம் கெர் உறுதிப்படுத்தினார்.
சதீஷ் கௌசிக் குருகிராமில் ஒருவரைப் பார்க்கச் சென்றதாகவும், அப்போது அவரது உடல்நிலை மோசமடைந்து காரில் செல்லும்பொழுது திடீரென மாரடைப்புஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் தற்போது குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் இருப்பதாகவும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மும்பைக்குக் கொண்டு வரப்பட இருக்கிறது.
சதீஷ் கௌசிக், தீவானா மஸ்தானா, பிரிக் லேன், ராம் லகான், சாஜன் சாலே சசுரல் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் சத்ரிவாலி, காகஸ், தார் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்களேன் – சென்னை…ஹைதராபாத் செல்லலும் படக்குழு..! ‘லியோ’ திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!
மேலும் அவர், ரூப் கி ராணி சோரோன் கா ராஜா, தேரே நாம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். 1990-ல் ராம் லக்கானுக்காகவும் 1997-ல் சாஜன் சாலே சசுரலுக்காகவும் சதீஷ் கௌசிக் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார்.
