Connect with us

News

பஞ்சதந்திரம் பட நடிகர் கைகலா சத்யநாராயணா காலமானார்.!

பஞ்சதந்திரம் பட நடிகர் கைகலா சத்யநாராயணா காலமானார்.!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்த பிரபல நடிகர் கைகலா சத்யநாராயணா கவலைக்கிடமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சற்றுமுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Kaikala Satyanarayana passes away

Kaikala Satyanarayana passes away [Image Source: Google]

இந்நிலையில், அவரது இறுதி சடங்குகள் நாளை ஹைதராபாத்தில் உள்ள மகாபிரஸ்தானத்தில் நடைபெறும். தற்போது, அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், டிவிட்டரில் #RipLegend என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது..

Kaikala Satyanarayana passes away

Kaikala Satyanarayana passes away [Image Source: Google]

பழம்பெரும் டோலிவுட் நடிகர் கைகலா சத்ய நாராயணா, ஓரிரு தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், இதுவரை 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அதில், கமல்ஹாசனின் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இதையும் படிங்களேன் – 50-வது நாள் இமாலய வெற்றி…OTT-யில் வெளியாகியும் திரையரங்குகளில் மாஸ் காட்டும் ‘லவ் டுடே’..!

Kaikala Satyanarayana passes away

Kaikala Satyanarayana passes away [Image Source: Google]

மேலும், கைகலா சத்ய நாராயணா ‘பெரியார்’ படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டார். அட ஆமாங்க… 1996-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மச்சிலிப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top