News
12 வருட கனவை நனவாக்கியதற்கு நன்றி.! நடிகர் கவின் உருக்கம்…
நடிகர் கவின் ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றதன் மூலம் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். தற்போது, இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கிய அப்பா சென்டிமென்ட் படமான ‘டாடா’ திரைப்படத்தில் நடித்தார்.
பிப்ரவரி 10 அன்று வெளியானக இந்த படத்தில் கவினுடன் நடிகை அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், இந்த திரைப்படம் சிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, சூப்பர்ஹிட் என்று தயாரிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பொது, படம் திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு, இன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. டாடா படம் OTT வெளியீட்டிற்கு முன்னதாக கவின் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்களேன் – லாங் டிரைவ் போலாமா.! Luxury காரில் சாக்ஷி அகர்வால்…
Dada on prime video 🙂 @PrimeVideoIN @PrimeVideo pic.twitter.com/7t5sBpzjpU
— Kavin (@Kavin_m_0431) March 9, 2023
அந்த வீடியோவில் அவர், “டாடா திரைப்படம் இன்று பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட திரையரங்குகளில் மக்கள் அளித்த ஆதரவு பெரியது. இது எனது 12 வருட கனவு என்றும் அது நிறைவேறியிருப்பதாகவும் கூறினேன். மேலும், நல்ல படத்துக்கு வரவேற்பு அளித்த மக்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் என ஆதரவளித்த தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
