News
நடிகர் சிம்பும் நடிகை த்ரிஷாவும் காதலித்தார்கள்..? பரபரப்பை கிளப்பிய நடிகர்…
சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் குறித்த வதந்தி தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது உண்டு. அந்த வகையில், தற்போது பரவும் தகவல் என்னவென்றால், நடிகர் சிம்புவும் நடிகை த்ரிஷாவும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருந்த சமயத்தில் காதலித்தார்களாம். அந்த படத்தில் வரும் முத்தக்காட்சி கூட திட்டமிடப்பட்டு வைக்கப்பட்டது தான் எனவும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

vinnaithandi varuvaaya [Image Source : Twitter /@kkrkarthikfox]
விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு முன்னதாகவே நடிகை த்ரிஷா சாமி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்திலே சிம்புவுக்கும் அவருக்கும் இடையே காதல் இருப்பதாக தகவல்கள் பரவியதாம். அதனை உறுதிப்படுத்தும் வகையில், தான் த்ரிஷாவும் சிம்புவும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடித்ததாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறினார்.

Simbu and trisha [Image Source : Twitter /@kkrkarthikfox]
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் எதிர்பாராத வகையில் இருவரும் முத்தமிட்டு கொள்வார்கள் . ஆனால் அந்த முத்த காட்சி கூட இருவரும் உணர்வில் இருந்து வந்துதான் எனவும், ஒரு படங்களில் முத்தக்காட்சிகள் வைக்கும் போது அதனை திட்டமிட்டு தான் வைப்பார்கள். ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் அந்த முத்தக்காட்சி எதார்த்தமாக நடந்தது தான் எனவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

From Simbu and Trisha [Image Source : Twitter /@Kade_Nixxon]
அது மட்டுமின்றி த்ரிஷா மனதில் முதலில் இடம்பிடித்தவர் நடிகர் சிம்பு தான் எனவும், அதன் பிறகு தெலுங்கு நடிகர் ராணாவை அவர் காதலித்ததாகவும் பையில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி த்ரிஷா உற்சாக பானம் அருந்துபவர் என்றும் அவர் ஒரு முறை சென்னை கடற்கரை சாலையில் மது அருந்திவிட்டு நடனமாடியதாகவும் பயில்வான் ரங்கநாதன் பரபரப்பான தகவலை பகிர்ந்துள்ளார்.

Trisha [Image Source : Twitter /@igtamil]
சினிமா துறையில் இருக்கும் நடிகைகளை பற்றி பரபரப்பான தகவல்களை பயில்வான் ரங்கநாதன் கூறுவது ஒன்னும் புதிதான விஷயம் அல்ல. எனவே, அவர் தற்போது த்ரிஷா பற்றி பேசிய தகவலை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா..? என பயில்வான் ரங்கநாதனை தீட்டி தீர்த்து வருகிறார்கள்.
Related
