ஆயில் மசாஜால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் எஸ்.வி. சேகர்.!
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் எஸ்.வி சேகர் பல தமிழ் படங்களில் ஹீரோவாகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். ஆனால், சமீப காலமாக பா.ஜ.க.வில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 71 வயதான அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அட ஆமாங்க… இது குறித்து நடிகர் சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “திடீரென கடுமையான வாந்தியுடன் மெட்ராஸ் ENT மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுளேன், இதற்கு காரணம் என் ஆர்வக்கோளாறு எண்ணெய் மசாஜ் செய்ததால் இந்த விளைவு ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்களேன் – பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் உலக நாயகன் கமல்ஹாசன்.!
மேலும் அந்த பதவில், கடவுள் அருளால் & டாக்டர் மோகன் காமேஸ்வரன் குணமடைந்து டிஸ்சார்ஜ் மருத்துவமனையில் இருந்து செய்யப்பட்டுள்ளேன். இப்போது வீட்டில் முழு ஓய்வு எடுக்கிறேன், ஒவ்வொரு நாளும் நாம் ஒரு பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த முறை எந்த விலையும் இல்லாமல் NOMORE OIL MASSAGES செய்தற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
