News
#Bikili: நடிகர் விஜய் ஆண்டனி அறிமுகம் செய்த கெட்ட வார்த்தை பாடல்.!
விஜய் ஆண்டனியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிச்சைக்காரன் 2 திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக தயாராகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி லேசியாவில் ஒரு முக்கியமான காட்சியை படமாக்கும்போது கடுமையான விபத்தை சந்தித்தார்.
இதனை தொடர்ந்து, அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிவித்த பிறகு, இந்த படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு, படத்தில் வரும் பிக்கிலி யார் என்று வெளியிடுவேன் என்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.
அதன்படி, நேற்று ஒரு ஜோக்கர் பொம்மை புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு இவன்தான் பிக்கிலி, கொஞ்சம் கவலப்படுங்க, முடிஞ்சா பயப்புடுங்க. இவனப்பத்தி, நாளை மாலை 4 மணிக்கு பிக்கிலி பாடலில் இன்னும் நிறைய சொல்றேன் என்று தவித்திருந்தார். அதன்படி, தற்போது இப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளார்.
அந்த பாடல் தொடக்கத்தில் பேசும் விஜய் ஆண்டனி, தமிழில் புதிய கெட்ட வார்த்தையைக் கண்டு பிடித்துவிட்டேன். சமூகத்தில் மற்றவர்களை அடக்குபவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையைத் தங்கள் சுயநலச் செயல்களால் துன்புறுத்துபவர்களையும் விவரிக்க தான் இந்த கெட்ட வார்த்தை உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்களேன் – ‘லியோ’ படக்குழுவில் இருந்து விடைபெறும் முக்கிய வில்லன்.! வெளியான அறிவிப்பு…
#BIKILI song 🤡
பிச்சைக்காரன் 2 – https://t.co/3mO7fUDtm7
బిచ్చగాడు 2 – https://t.co/skUOpboFM4 pic.twitter.com/7OqrZreUGl— vijayantony (@vijayantony) March 17, 2023
பாடலை அவரே இயற்றி, எழுதி, பாடியிருக்கிறார். மேலும், இந்த வீடியோவில் விஜய் மற்றும் காவ்யா தாப்பர் ஒருவரையொருவர் ரோமன்ஸ் செய்யும் சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பிச்சைக்காரன் 2 படத்தில் ராதா ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலிகான் மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
