News
காதலியை கடத்திய நடிகர் விமல்.? களவாணி படத்தை போல நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவம்.!!
தமிழ் திரையுலகில் நடிகர் விமல் துணை நடிகராக நடித்து பிறகு படிப்படியாக ஒவ்வொரு படங்களில் ஹீரோவாக நடித்து தற்போது அவருக்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவருடைய நடிப்பில் வெளியான களவாணி படம் சமயத்தில் இவருக்கு இளைஞர்களுக்கு மத்தியில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

vimal [Image Source : File Image ]
இப்போது அவர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றால் கூட அவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை. இந்நிலையில் விமலுக்கு மார்க்கெட் குறைந்ததற்கு காரணம் என்னவென்பது குறித்து சினிமா விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

vimal [Image Source : File Image ]
இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் “விமல் எந்த ஒரு பின் உதவிகளும் இல்லாமல் நடிகராக வளர்ந்தவர் அவருடைய சொந்த ஊர் பட்டுக்கோட்டை. அந்த ஊரில் இருந்து வரும் போது துணை நடிகராக இருந்தார். பிறகு விமலுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது தொடர்ச்சியாக பல படங்களில் ஹீரோவாக நடித்தார். அந்த படங்களும் வெற்றி அடைந்தது.

vimal [Image Source : File Image ]
விமலும் ஒரு போதைப் பிரியர் ஏதேனும் நிகழ்ச்சிகள் சென்றால் சரக்கு அடித்து விட்டு தான் வருவார். படப்பிடிப்பு சமயத்திலும் குடுத்து விட்டுத்தான் நடனம் ஆடுவார். அது மட்டுமின்றி காதலித்த பெண்ணை கடத்தி சென்று தான் திருமணம் செய்து கொண்டார். திருமண வரவேற்புக்கு அனைவரும் அழைப்பார் என்று தெரிவித்திருந்தார் ஆனால் அழைக்கவில்லை.

vimal [Image Source : File Image ]
இதையும் படியுங்களேன்- மிஸ் பண்ணிட்டோம்…’குட் நைட்’ படத்தை பார்த்துவிட்டு வருத்தப்படும் ரசிகர்கள்..!!
அது மட்டும் இல்லை நடிகர்கள் மார்க்கெட்டை இழந்தால் அப்படியே நைசாக வில்லன் ரோல்கள், துணை கதாபாத்திரங்கள் என நடிப்பார்கள். ஆனால் விமல் அப்படி எதுவும் செய்யாமல் சொந்தமாக இரண்டு படங்கள் எடுத்தார் இதனால் மார்க்கெட் சுத்தமாக அவருக்கு இறங்கி விட்டது. அவருடைய படங்களும் ஓடவில்லை. இது தான் அவர் மார்க்கெட் இழந்ததற்கு முக்கிய காரணம்” என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
