News
கணவருடன் பிரச்சனை.. திடீர் விவாகரத்து..? மனம் திறந்த நடிகை அசின்.!!
சினிமா துறையில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு விட்டு நீக்கிவிட்டாலோ அல்லது கணவருடைய பெயரை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் தூக்கி விட்டாலோ விவாகரத்து செய்வதாக நெட்டிசன்கள் வதந்தியான தகவலை பரப்பி விடுவார்கள். அதன் பிறகு அந்த நடிகைகள் அல்லது நடிகர்கள் அதைப்பற்றி பதறிப் போய் விலக்கமும் கொடுப்பார்கள்.

asin and rahul sharma [Image Source : File Image ]
அந்த வகையில், நடிகை அசின் பற்றிய வதந்தி தகவலும் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. அதன்படி, கடந்த சில நாட்களாகவே அசின் தனது கணவரை விவாகரத்து செய்து கொண்டதாகவும், இதற்கு காரணம் அவருக்கும் கணவருக்கும் ஏற்பட்ட திடீர் பிரச்சனை தான் எனவும், இதனால் அசின் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியாகவும், சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.

asin about Rumor [Image Source : File Image ]
இதனையடுத்து, நடிகை அசின் தனது விவாகரத்து வதந்தி பற்றி சமூக வலைதள பக்கங்களில் பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அசின் கூறியதாவது ” நானும் என்னுடைய கனவும் எங்கள் கோடை விடுமுறையின் நடுவில், ஒருவரையொருவர் நேருக்கு நேர் அமர்ந்துகொண்டு காலை உணவை சாப்பிட்டு கொண்டு இருந்தோம். இதற்கிடையில், மிகவும் முற்றிலும் ஆதாரமற்ற ‘செய்திகளை’ பார்த்தோம்.

Actress asin [Image Source : File Image ]
நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம் என்ற வதந்தி தகவலை கேள்விப்பட்டோம். தயவுசெய்து சிறப்பாக வேறு எதாவது செய்யுங்கள். இதற்காக 5 நிமிடம் ஒரு அற்புதமான விடுமுறையை வீணடித்ததில் ஏமாற்றம் ந்த நாள் இனிய நாளாக அமையட்டும் நண்பர்களே” என அசின் மிகவும் கோபத்துடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் அவருக்கு நீங்க கவலை படாதீங்க…கோப படாதீங்க என ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

asin marriage [Image Source : File Image ]
இதையும் படியுங்களேன்- எங்க அப்பா 4 பேர வச்சிருந்தாரு…எம்.ஆர்.ராதா பற்றி பேசிய மகன் ராதா ரவி…
மேலும், நடிகை அசின் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த காலகட்டத்திலேயே கடந்த 2016-ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆனதை தொடர்ந்து அப்படியே சினிமாவை விட்டு விலகி திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
