News
மது அருந்திக்கொண்டு மஜாவாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஹன்சிகா!
நடிகை ஹன்சிகா நேற்று தனது 32-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இஸ்தான்புல்லில் தனது கணவர் சோஹேல் கதுரியாவுடன் சிறப்பு நிகழ்வைப் பகிர்ந்து கொண்ட ஹன்சிகா, இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் தனது கொண்டாட்டங்களைப் பற்றி நெகிழ்ச்சியான சம்பவங்களை தனது ரசிகர்களுக்காக பகிர்ந்து கொண்டார்.

HansikaMotwani [Image Source : Instagram/@ihansika]
நடிகை ஹன்சிகா தனது பிறந்த நாளை கடலில் நடுவே கப்பலில் நின்று கொண்டு கடலை ரசித்தபடி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு புகைப்படத்தில் ஹன்சிகா ஒரு கிளாஸ் மதுவை குடித்துக்கொண்டு இருப்பது போலவும் மற்றோரு புகைப்படத்தில் கடலை ரசிக்கும்படியும் இருக்கிறது.
View this post on Instagram
வீடியோவில் ஹன்சிகா கையில் மத்தாப்பூ வைத்துக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி தனது கணவருடன் கொண்டாடினார். இந்த வீடியோக்களை மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த பலரும் அருமை எப்போதும் இப்படியே மகிழ்ச்சியாக இருங்கள் என அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
நடிகை ஹன்சிகா கடந்த 2022 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சோஹைல் கதுரியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமண வீடியோ இது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யக் கிடைக்கிறது. தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பிரதிபலிக்கும் வகையில், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் விழாக்களைத் தொடங்குவதற்கான தனது கணவரின் ஆர்வத்தை நடிகை எடுத்துரைத்தார். எனவே, திருமண வீடியோவை போல இவருடைய பிறந்தநாள் வீடியோவும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
