Movies
வித்தியாசமான லுக்கில் நடிகை மாளவிகா மோகனன்! தங்கலான் படத்தின் மிரட்டல் போஸ்டர்!
தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் அடுத்ததாக மலையாளத்தில் ஒரு சில படங்களிலில் சில ஆல்பம் பாடல்களிலும் நடனம் ஆடி இருந்தார்.

Malavika Mohanan [Image Source : File Image ]
இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் இன்று தனது 30-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில், அவர் நடிக்கும் படங்களில் இருந்து அப்டேட்டுகளை வெளியீட்டு படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Malavika Mohanan
அந்த வகையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் தங்கலான் படத்தின் படக்குழு மாளவிகா மோகனின் கதாபாத்திரத்திற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளது. போஸ்டரில் இதுவரை இல்லாத அளவிற்கு முற்றிலும் வித்தியாசமான கெட்டப்பில் நடிகை மாளவிகா மோகனன் இருக்கிறார்.
ஏனென்றால், போஸ்டரை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக மாளவிகா மோகனனுக்கு கண்டிப்பாக இந்த படம் நடிப்பை வெளிக்காட்டுவதற்கான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இவர் தனுஷிற்கு ஜோடியாக நடித்த மாறன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால் இந்த படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுக்கவேண்டும் என நோக்கத்தில் இருக்கிறார்.
View this post on Instagram
