News
நடிகை ராதிகா மூன்று திருமணம் செய்தாரா..? அதிர்ச்சி தகவலை கூறிய பிரபல நடிகர்.!!
ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை ராதிகா. இவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு பல ரசிகர்கள் கூட்டம் இவருக்கு இருந்தது. இந்த நிலையில், இவர் சமீபகாலமாக வயதானவுடன் படங்களில் முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Raadhika Sarathkumar [Image Source : Instagram/@radikaasarathkumar ]
மேலும், நடிகை ராதிகா தற்போது கொலை, மற்றும் சந்திரமுகி 2 திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நடிகை ராதிகா 3 திருமணங்கள் செய்து கொண்டதாக சினிமா விமர்சகரும், நடிகருமான பேசிய பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Raadhika Sarathkumar [Image Source : Instagram/@radikaasarathkumar ]
இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” ராதிகா மூன்று திருமணங்கள் செய்து கொண்டார். முதலில் நடிகரும், இயக்குனருமான பிரதாப் கே போத்தனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்கள் இருவரும் சைதாப்பேட்யில் பக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்தார்கள். அதற்கு பிறகு, ராதிகா பிரதாப் கே போத்தனை விவாகரத்து செய்துவிட்டு லண்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Raadhika Sarathkumar [Image Source : Instagram/@radikaasarathkumar ]
ரிச்சர்ட் இலங்கை தொழிலதிபர் லண்டனில் வாழ்கிறார். கருத்துவேறுபடும் காரணமாக அவரையும் விவாகரத்து செய்து விட்டார் நடிகை ராதிகா. இதுவரை ரிச்சர்ட் நிலைமை என்ன ஆனது என்றே தெரியவில்லை. ரிச்சர்டுக்கு பிறகு தான் ராதிகா நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Raadhika Sarathkumar [Image Source : Instagram/@radikaasarathkumar ]
இதையும் படியுங்களேன்- தருமாறு போஸ் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன்…ரசிகர்களை திக்குமுக்காட வைத்த புகைப்படங்கள்.!!
ராதிகாவுக்கும் சரத்குமாருக்கும் ஒரு மகன் இருக்கிறான். சரத்குமார் ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு வரலட்சுமி என்ற மகள் இருக்கிறார்” எனவும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பயில்வான் ரங்கநாதனுக்கு வேற வேலையே இல்லை எனவும், ராதிகாவுக்கு 3 திருமணமா..? எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
