News
சும்மா ஒரு கிளிக்.! பகீரா படத்தை ப்ரமோஷன் செய்யும் நடிகை…
நடிகை சாக்ஷி அகர்வால் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள நான் கடவுள் இல்லை படத்தை தொடர்ந்து, பிரபுதேவா நடிக்கும் ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் சூரி இயக்கும் இந்த படத்தில், ஏழு பெண் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளது.
நடிகைகளான அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், காயத்ரி ஷங்கர், சோனியா அகர்வால், சஞ்சிதா ஷெட்டி மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிக்க, நடிகர் பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ளார், இந்த திரைப்படம் மார்ச் 3 அன்று வெளியாகிறது.
இந்நிலையில், பகீரா திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக இந்த படத்தில் நடித்துள்ள நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ‘சும்மா ஒரு கிளிக்’ பகீரா பட ப்ரோமோஷனுக்காக என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
இதையும் படிங்களேன் – க்யூட் அண்ட் பியூட்டி.! சேலையில் சும்மா அம்சமாக இருக்கும் மஞ்சு வாரியர்.!
அந்த வகையில், அடிக்கடி இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். இதற்கிடையில், சாக்ஷி அகர்வால் புரவி, ஆயிரம் ஜென்மங்கள், குறுக்கு வழி, ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
