அரிய வகை நோயால் நடிப்பிலிருந்து ஓய்வு பெரும் நடிகை சமந்தா.?
நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக தென் கொரியாவுக்குச் செல்வதாகவும், சில மாதங்கள் அங்கேயே தங்கியிருப்பார் என்று கூறப்பட்டது.

Samantha posts a black dress picture on her Instagram. [Image Source: Instagram/samantharuthprabhuoffl]
இந்நிலையில், அவர் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு சென்று திரும்பியவுடன், அவர் நடிக்க வேண்டியதாக இருந்த படத்திற்கான வேலையைத் தொடங்குவார் என்று சொல்லப்பட்ட்டது. ஆனால், இப்போது டோலிவுட் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களின்படி, தனது திரையுலக நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, நடிகை சமந்தா தனது உடல்நலத்தில் கவனம் செலுத்தவும், முழுமையாக குணமடையும் வரை படங்களில் இருந்து நீண்ட இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ளார் என்ற செய்தி தீயாக பரவி வருகிறது. இதனால், அவர் தனது நீண்ட இடைவேளைக்கு முன் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் தனது முதல் படமான ‘குஷி’ படப்பிடிப்பை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்களேன் – ஒரே ஒரு ஹிட்.! ஓகோன்னு வாழ்க்கை.! எகிறிய நடிகை இவானாவின் சம்பளம்….
இருப்பினும், சமந்தா சினிமாவில் இருந்து ஓய்வு எடுப்பது குறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த செய்தி குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
