Connect with us

Celebrities

பிரேம்ஜியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நடிகை சில்க் சுமிதா…தந்தை கூறிய ஆச்சரிய தகவல்.!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா தனது கவர்ச்சி நடனத்தால் பல ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தார் என்று கூறலாம். இவர் மண்ணை விட்டு மறைந்தாலும் கூட அவர் நடித்த படங்கள், அவர் நடனம் ஆடிய பாடல்கள் காலத்தால் அழிக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.

HBD_SilkSmitha

SilkSmitha [Image Source: Google]

இந்த நிலையில், சில்க் ஸ்மிதா பற்றி பல பிரபலங்கள் பேட்டிகளில் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த வகையில், இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில்க் ஸ்மிதா பற்றி பேசியுள்ளார்.  இது குறித்து பேசிய கங்கை அமரன் ” சில்க் ஸ்மிதா எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்.

இதையும் படியுங்களேன்- ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வேண்டும்…இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ்.!

Gangai Amaran

Gangai Amaran [Image Source: Twitter]

எங்களுடைய வீட்டிற்கு அடிக்கடி வருவார். என்னுடைய மனைவியுடன் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. அடிக்கடி எங்களுடைய வீட்டிற்கு வந்து சாப்பிடுவது செல்வதுமாக இருப்பார். அவருடைய இறப்பு எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சில்க் ஸ்மிதா என்னை மச்சான் என்றுதான் அழைப்பார்.

gangai amaran about Silk Smitha

gangai amaran about Silk Smitha [Image Source: Twitter]

‘இன்னொரு விஷியத்தை நான் சொன்னால் எல்லோரும் பொறாமைப்படுவார்கள், என்னை பார்த்ததும் சில்க் ஓடி வந்து கட்டிபிடித்துக்கொள்வார். பிரேம்ஜி அப்போது சிறிய பையன், அவனைப்பார்த்து நான் பிரேம்ஜியைத்தான் திருமணம் செய்வேன் என்று விளையாட்டாக கூறுவார். பிரேம்ஜி வெட்கத்தில் ஓடிவிடுவான்’ என கங்கை அமரன் கூறியுள்ளார்.

Continue Reading
To Top