News
#Breaking: நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்.!
நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்.
நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 2021-ல் மகாபலிபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரது நண்பரான வள்ளிசெட்டி பவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த மகாபலிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், யாஷிகா ஆனந்த் குடிபோதையில் வாகனத்தை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக யாஷிகா ஆனந்த் மீது புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த, யாஷிகா ஆனந்த் பூரணம் குணமடைந்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில், மாமல்லபுரத்தில் கார் விபத்து தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மார்ச் 21-ம் தேதி செங்கல்பட்டு ஆஜராக வேண்டி இருந்தது.
ஆனால், யாஷிகா ஆஜராகாத நிலையில், கடந்த மார்ச் 24ம் தேதி விபத்து ஏற்படுத்திய வழக்கில், யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து செங்கல் பட்டு நீதிமன்ற உத்தரவிட்டது. தற்போது, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.
