News
அடேங்கப்பா….சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்ற அருணாவுக்கு என்னென்ன பரிசுகள் தெரியுமா..?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 9 இன் இறுதிப் போட்டி ஜூன் 25 அன்று நடந்தது. இந்த இறுதிப்போட்டியில் அருணா ரவீந்திரன் இந்த சீசனின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு டைட்டிலை வென்றார். இறுதிப்போட்டி மிகவும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்ற காரணத்தால் பிரபல இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

Aruna [Image Source : Twitter /@vijaytelevision]
ஹாரிஸ் ஜெயராஜ் கலந்து கொண்டதால் நிகழ்ச்சியே களைகட்டியது என்றே கூறலாம். இந்நிலையில், இறுதிப்போட்டியில் அருணா ரவீந்திரன் டைட்டிலை வென்றார். அவருக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கோப்பையை வழங்கினார். மேலும், இந்த சீசனில் மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து பாடி பரிசை வென்ற அருணாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

SuperSingerSeason9 winner aruna [Image Source : Twitter /@vijaytelevision]
இந்நிலையில், சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்ற அருணாவுக்கு என்னென்ன பரிசுகள் எல்லாம் கிடைத்திருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம். அதன்படி, அருணாவுக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்று பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரூ.10 லட்சம் ரொக்கப் பணமும் பரிசாக கிடைத்துள்ளது.

SuperSingerSeason9 [Image Source : Twitter /@vijaytelevision]
மேலும், தன் பெயர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதும் அருணா மேடையில் கண்ணீர் விட்டு அழுது சற்று எமோஷனலானார். வெற்றிபெற்றது குறித்து பேசிய அருணா ” பயணம் முழுவதும் தனக்கு ஆதரவாக இருந்த தாத்தா, பாட்டி, பெற்றோர் மற்றும் வழிகாட்டிகளுக்கு நன்றி” என தெரிவித்தார்.
இதையும் படியுங்களேன்- ரஜினிக்கு தான் வில்லனா நடிப்பேன்…அடம் பிடிக்கும் 40 கதை அஸ்வின்…கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்…

PriyaJerson [Image Source : Twitter /@vijaytelevision]
மேலும், அருணா டைட்டிலை தட்டி சென்ற நிலையில், ப்ரியா ஜெர்சன் இரண்டாவது இடத்தைப் பிடித்து 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசை வென்றார். பிரசன்னா இரண்டாவது ரன்னர்-அப்பாக அறிவிக்கப்பட்டு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசைப் பெற்றார். இறுதிப் போட்டிக்கு வந்த அபிஜித் மற்றும் பூஜா நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
