Connect with us

Celebrities

திருமணத்திற்கு பிறகு அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது..நடிகை காஜல் அகர்வால் நெகிழ்ச்சி.!

நடிகை காஜல் அகர்வால் திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் நடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து நல்ல கதையாமசம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் கோஸ்டீ  திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக ஒரு நாள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Kajal Aggarwal

Kajal Aggarwal [Image Source: Twitter]

அந்த வகையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை காஜல் அகர்வால் நெகிழ்ச்சியுடன் சில விஷயங்களை பேசியுள்ளார்.  இது குறித்து பேசிய நடிகை காஜல் அகர்வால் ” என்னுடைய திருமண வாழ்கை ரொம்பவே சூப்பராக இருக்கிறது. குழந்தையை பராமரிக்க அதிக நேரம் ஒதுக்குகிறேன். நான் திருமணத் துக்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

Kajal Agarwal is playing with her child

Kajal Agarwal is playing with her child. [Image Source: Instagram/kajalaggarwalofficial]

ரசிகர்கள் எனக்கு அளிக்கும் வரவேற்பினால் தான் தொடர்ந்து நடிக்க முடிகிறது. இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித் துக்கொள்கிறேன். திருமணத்துக்கு பிறகு எனக்கு நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.இது சந்தோஷமாக இருக்கிறது. ஏற்கனவே தமிழில் நான் நிறைய நல்ல படங்களில் நடித்து இருக் கிறேன்.

இதையும் படியுங்களேன்-கண்களை பறிக்கும் கவர்ச்சி உடையில் யாஷிகா…வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

kajal Aggarwal

kajal Aggarwal [Image Source: Google]

தமிழில் நடித்த ‘நான் மகான் அல்ல’ எனக்கு முதல் வெற்றி பட மாக அமைந்தது” என்று கூறியுள்ளார். மேலும் நடிகை காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top