News
ஆபரேஷன் பண்ணி தான் அதை குறைசீங்களானு கேட்டாங்க…நடிகை கீர்த்தி சுரேஷ் குமுறல்…
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் அதிகரித்த தோற்றமும் இல்லாமல் மிகவும் ஒல்லியான தோற்றமும் இல்லாமல் சரியான ஒரு நடிகைக்கு தேவையான உடல் அமைப்புடன் இருந்தார். இதனால் என்னவோ அவருக்கு பெரிய படகளில் நடிக்கும் வாய்ப்புகளும் தொடர்ச்சியாக குவிந்தது. இப்படி பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் திடீரென தனது உடல் எடையை குறைத்தார்.

Keerthy Suresh [Image Source : Instagram/@Keerthy Suresh]
அவர் உடல் நிலையை குறைத்த காரணத்தால் என்னவோ அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் தொடர்ச்சியாக குறைந்தது. இதனால் சினிமா வட்டாரத்தில் கீர்த்தி சுரேஷ் வேண்டுமென்றே உடல் எடையை குறைத்தாரா..? அல்லது ஏதேனும் படத்திற்காக உடல் எடையை குறைத்தாரா அல்லது அவருக்கு ஏதேனும் நோய்கள் இருக்கிறதா..? என பல கேள்விகள் எழும்பியது.

Keerthy Suresh [Image Source : Instagram/@Keerthy Suresh]
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ் நான் மகாநதி படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் தான் உடை எடையை குறைத்தேன். சரியான உடற்பயிற்சி செய்து மட்டும் தான் என்னுடைய உடல் எடையை குறைத்தேன். சிலர் என்னிடம் கேட்டார்கள் நான் ஆபரேஷன் செய்து உடல் எடையை குறைத்தேன் என்று ஆனால், நான் ஆபரேஷன் பண்ணவே இல்லை.

Keerthy Suresh [Image Source : Instagram/@Keerthy Suresh]
சரியான உடல் எடையை மேற்கொண்டேன் என்னுடைய உடல் எடை 10 கிலோ குறைந்து விட்டது. ஒன்பது மாதங்கள் பத்து மாதங்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தேன். பிறகு சமீபத்தில் நான் மிகவும் இழைத்துவிட்டேன் என்ற காரணத்தால் யோகாசனம், ஜூம்மிற்கு சென்று மீண்டும் உடல் எடையை ஏற்ற முயற்சி செய்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Keerthy Suresh [Image Source : Instagram/@Keerthy Suresh]
இதையும் படியுங்களேன்- விஜய்க்கும் எனக்கு நடுவுல பிரச்சனை…அவர் அரசியலுக்கு வரட்டும் ..’ஆனால்’….உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்…
மேலும் கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக சைரன், ரகு தாத்தா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
