News
அகிலன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் “துரோகம்” வெளியீடு.!
நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் ‘அகிலன்’ படத்தின் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் இப்படம் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்தனர். கல்யாண கிருஷ்ணன் இயக்கிய இந்தப் படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். அகிலன் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
தற்போது, படத்தின் முதல் பாடலுக்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையைமைத்துள்ள “துரோகம்” பாடல் வெளியாகியுள்ளது. ஒரு பெரிய சண்டை கட்சிகளுக்கு பிறகு இந்த பாடல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது என்று தெரிகிறது. மேலும் இந்த துரோகம் பாடலில் நடிகர் ஜெயம் ரவி கோபத்துடன் காட்சியளிக்கிறார்.
இந்த படத்தில் ஜெயம் ரவி ரவுடியாக நடிக்க மறுபுறம், பிரியா பவானி சங்கர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்களேன் – வெற்றியின் ‘மெமரிஸ்’ படத்துக்கு ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு..!
இதற்கிடையில், ஜெயம் ரவி கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன் 2, சைரன் மற்றும் இறைவன் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இதில் முதலில் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் பொன்னியின் செல்வன் 3ம் பாகத்தில் அருண்மொழி வர்மனாக களமிறங்கவுள்ளார்.
