News
அசிங்க அசிங்கமா திட்டிய ஆட்டோக்காரர்…சிரித்துக்கொண்டே உண்மையை கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தீயவர் கொலை நடுங்க எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக பல படங்களில் நடித்தும் சில புதிய படங்களில் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். அது மட்டுமின்றி இவருடைய நடிப்பில் பல படங்களில் இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது. விரைவில் அந்த படங்களும் ரிலீஸ் ஆகவுள்ளது.

Aishwarya Rajesh mage Source : Instagram/@aishwaryarajessh
]
இதற்கிடையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் கார் மீது மிகவும் பிரியமானவள் எனவும், தான் கார் ஓட்டி ஆட்டோக்காரர்கள் இடம் பயங்கரமாக திட்டு வாங்கி இருக்கிறேன் எனவும் மனம் திறந்து நடந்த காமெடியான சில சம்பவங்களை பற்றி பேசி உள்ளார். இது குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் ” எனக்கு சிறிய வயதில் இருந்தே கார் மிகவும் பிடிக்கும்.

Aishwarya Rajesh mage Source : Instagram/@aishwaryarajessh
]
ஒரு 7 வருடங்களுக்கு முன்பு நான் என்னுடைய அம்மாவிடம் கூறிவிட்டு 8 லட்சம் மதிப்புள்ள ஒரு கார் ஒன்றை வாங்கினேன். அம்மா நான் புதிய கார் வாங்கப்போகிறேன் உங்களுக்கு சம்மதமா என்று கேட்டேன் அம்மாவும் சம்மதம் தெரிவித்தார். ஒரு படத்தின் அட்வான்ஸ் வாங்கி வைத்திருந்தேன். அதனை வைத்து எனக்கு பிடித்த காரை வாங்கினேன்.

Aishwarya Rajesh mage Source : Instagram/@aishwaryarajessh
]
அந்த சமயம் எனக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால் சாலையில் ஒரு நாள் ஒட்டி கொண்டு சென்ற போது ஆட்டோ மீது தெரியாமல் லைட்டாக இடித்துவிட்டேன் உடனடியாக என்னை அந்த ஆட்டோக்காரர் திட்டினார். எனக்கு அந்த சமயம் சிரிப்பாக வந்தது. அந்த ஆட்டோக்காரர் என்னை என்னமா அறிவில்லையா..? வண்டியோட்ட தெரியாதா..? என கெட்ட வார்த்தைகள் போட்டு திட்டினார்.

Aishwarya Rajesh mage Source : Instagram/@aishwaryarajessh
]
இதையும் படியுங்களேன்- கணவருடன் பிரச்சனை.. திடீர் விவாகரத்து..? மனம் திறந்த நடிகை அசின்.!!
அந்த சமயம் அவர் அசிங்க அசிங்கமா திட்டுனாரு…பிறகு என்ன செய்வது என்று தெரியாமலே காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்” என மிகவும் கலகலப்பாக பேசியுள்ளார். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விரைவில் துருவநட்சத்திரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
