Connect with us

Tweets

அம்மன் கோவிலில் இனிதே ஆரம்பம்.! முழு வீச்சில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு 7ம் தேதி முதல் சென்னையில் தொடங்கியது, இப்பொது படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்று தாது ட்வீட்டர் பக்கத்தில், இந்த படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

lal salaam shooting

lal salaam shooting [Image Source: Twitter]

அதாவது, இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி, ஒரு பழமையான அம்மன் கோவிலில் படப்பிடிப்பு நடத்துவது தற்செயல் என்று சொல்லலாம் (அல்லது) சில சமயங்களில் கடவுள் தன் குழந்தையுடன் தொடர்புகொள்வதற்கான இனிமையான சிறிய வழிகளைக் கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த செட்யூலில் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் ஜீவிதா ராஜசேகர் ஆகியோர் இணைந்துள்ளார்களாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார்.

இதையும் படிங்களேன் –  ஆஸ்கர் 2023: வீடு திரும்பிய ராம் சரணுக்கு ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு.!

lal salaam rajinikanth

lal salaam rajinikanth [Image Source: Twitter]

ரஜினி தற்போது, நெல்சன் திலீப்குமார் இயக்கும் “ஜெயிலர்” படப்பிடிப்பில் இருப்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் படப்பிடிப்பை முடித்தவுடன் லால் சலாம் படக்குழுவுடன் இணைவார். இப்போது, லால் சலாம் படக்குழுவில், பழம்பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Continue Reading
To Top