Connect with us

News

ஐஸ்வர்யா வீட்டில் திருட்டு: மேலும் 43 சவரன் மீட்பு.!

ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டு வழக்கில் மேலும் 43 சவரன் நகைகள் மீட்பு.

சமீபத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் லாக்கரில் வைத்திருந்த விலை உயர்ந்த நகைகள் மற்றும் ஆபரணங்கள் திருடப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணியாற்றி வந்த, வேலைக்காரப் பெண் ஈஸ்வரி மற்றும் அவரது கணவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தற்போது, போலீசார் அவர்களிடம் இருந்து நகைகளை மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனராம்.

ஏற்கனவே, சில சரவண் தங்கம் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 43 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இது போக, ஐஸ்வர்யா வீட்டில் திருடி சென்னை ஓஎம்ஆரில் நிலம் வாங்கியதும்  கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிங்களேன் – இன்று இரவு 9.30 மணிக்கு வெளியாகிறது பொன்னியின் செல்வன்- 2 படத்தின் ட்ரெய்லர்.!

இதற்கிடையில், நேற்று ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் ஆகியரை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் 3- நாள் கேட்ட நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றம் இரண்டு நாட்கள் காவலில் வைக்க அனுமதி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top