Collection
வெளிநாட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் அஜித்குமார்.! போட்டோவை லீக் செய்த ஷாலினி…
நடிகர் அஜித் விடுமுறைக்காக அடிக்கடி தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக, ஷாலினி அவரது கணவரும் நடிகருமான அஜித்துடன் ஐரோப்பாவில் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாடும் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில், ஷாலினி நான்கு பேர் கொண்ட தனது குடும்பத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, “குழந்தைகளுடன் இருப்பதன் மூலம் ஆன்மா குணமாகும்” என்று குறிப்பிட்டு இருந்தார். தங்கள் இரண்டு குழந்தைகளுடன் பரந்த பசுமையான மைதானத்தில் நேரத்தை கழித்துள்ளனர்.
View this post on Instagram
தற்போது, ஷாலினியும் அஜித்குமாரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்களேன் – இரண்டு ஆஸ்கார் விருதுகளும் உத்வேகம் அளிக்கிறது – ஷாருக்கான் ட்வீட்…
இதற்கிடையில், அஜித் கடைசியாக ‘துணிவு’ படத்தில் நடித்தார். அவர் விரைவில் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் தனது அடுத்த படமான ‘AK 62’ படத்திற்கான தனது வேலையைத் தொடங்கவுள்ளார். மேலும், இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
