Movies
அகிலன் திரைப்படம் 3 நாட்களில் இவ்வளவு தான் வசூலா..? சோகத்தில் ஜெயம் ரவி ரசிகர்கள்.!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஜெயம் ரவி “அகிலன்” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான. இந்த திரைப்படத்தை இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார்.

Agilan 10 MARCH [Image Source: Twitter]
இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ள இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. எனவே படம் 60 % பாசிட்டிவ் விமர்சனங்களை 40 நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

Agilan From March 10 [Image Source: Twitter]
இந்த நிலையில், இந்த திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, 3 நாட்களில் அகிலன் திரைப்படம் கிட்டத்தட்ட 10 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பார்த்த ஜெயம்ரவி ரசிகர்கள் இன்னும் அதிகமாக வசூல் செய்திருக்கவேண்டிய படம் என்று அவருடைய ரசிகர்கள் சற்று சோகத்துடன் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

JayamRavi – Agilan [Image Source: Google]
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக இறைவன் படத்தில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
