News
ஒரு நாளைக்கு 7 லட்சம் கேட்கிறேனா..? பட வாய்ப்புகள் வராததால் கடுப்பான இமான் அண்ணாச்சி.!!
இமான் அண்ணாச்சி என்றாலே அவருடைய காமெடி அவருடைய கலகலப்பான பேச்சு தான் நம்மளுடைய நினைவிற்கு வருகிறது. படங்களில் தொடர்ச்சியாக கடந்த சில ஆண்டுகளில் நடித்து கலக்கி வந்தார். ஆனால், சமீபகாலாமாக பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

Imman Annachi [Image Source : Twitter /@TVFS_official]
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இமான் அண்ணாச்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிப்பதறக ஒரு நாளைக்கு சம்பளமாக 6 லட்சம் 7 லட்சம் கேட்பதாக தகவல்கள் பரவியது. இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த வதந்தி தகவலுக்கு விளக்கம் கொடுத்து தனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என சோகத்துடன் பேசியுள்ளார்.

Imman Annachi [Image Source : File Image ]
இது குறித்து பேசிய இமான் அண்ணாச்சி ” எனக்கு காக்கி சட்டை படம் வரை பல பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது. அதன்பிறகு எதற்காக பட வாய்ப்புகள் வரவில்லை என்ற கேள்வி எனக்குள்ளே இருக்கிறது. இந்த கேள்விக்கும் எனக்கு பதில் கிடைக்கிறது. அது என்னவென்றால் சிலர் அண்ணாச்சி ஒரு நாளைக்கு சம்பளமாக 6 லட்சம் 7 லட்சம் கேட்கிறார் என்று கொளுத்தி விட்டு போகிறார்கள்.

Imman Annachi [Image Source : File Image ]
நான் எங்கடா 6 லட்சம் 7 லட்சம் கேட்டேன்..? சில தயாரிப்பு நிறுவனங்கள் என்னிடம் சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்கிறோம் அண்ணாச்சி நீங்கள் கேட்கும் சம்பளம் வெளியே கேள்விப்பட்டோம் என்று கூறினார்கள். அதற்கு நான் எவ்வளவு என்று கேட்டேன்..? அதற்கு அவர்கள் சொல்லும் தகவல் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

Imman Annachi [Image Source : File Image ]
நான் அவ்வளவு பணம் எல்லாம் வாங்கவே இல்லை. ஒரு நல்ல தொகை தான் வாங்குகிறேன் 6,7 லட்சம் எல்லாம் வாங்கவில்லை. அந்த இடத்திற்கு நான் இன்னும் போகவில்லை, ஆனால் கண்டிப்பாக அந்த இடத்திற்கு போவேன் என நம்புகிறேன்” என இமான் அண்ணாச்சி சற்று வருத்தத்துடன் பேசியுள்ளார். இவர் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் அண்ணாச்சி நல்ல மனிதர் அவருக்கு பட வாய்ப்புகள் கொடுங்க என கூறிவருகிறார்கள்.
