Videos
வடிவேலுக்கு 4 பசங்களா.? ரேஷன் கார்டில் கூட காட்டாத சுவாரசிய கதை..!
வைகை புயல் வடிவேலுக்கு எத்தனை பிள்ளைகள் என்று உங்களுக்கு தெரியுமா? அவரது பிள்ளைகள் புகைப்படங்களை பார்த்ததுண்டா? அண்மையில் கூட அவரது பொண்ணுக்கு திருமணம் ஆன புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வெளியாகி வைரலானது.
நடிகர் வடிவேலுவின் திரை வாழ்க்கையை பற்றி தெரிந்திருந்தாலும், அவரின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி பெரிதும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொதுவாக திரைபிரபலங்கள் என்று எடுத்துக்கொண்டால், சிலர் தங்கள் பிள்ளைகளை வெளி உலகத்துக்கு காட்டவில்லை என்றாலும், பலர் தங்கள் பிள்ளைகளை வெளி உலகத்துக்கு காட்டுவதை மீறி, திரையில் ஒன்றாக நடித்தும் உள்ளார்கள்.
ஆனால், நம்ம வைகை புயல் வடிவேலு மிகவும் வித்யாசமாக இருக்கிறார். அதாவது, வடிவேலுக்கு மொத்தம் 4 பிள்ளைகள் என்றும் அவர்களிள் இரண்டு பிள்ளைகளை மட்டுமே தனது ரேஷன் கார்டில் பதிந்து வைத்துள்ளார் என்றும் மீதமுள்ள இரண்டு பிள்ளைகளை ரேஷன் கார்டில் காட்டவில்லை என்ற ஒரு சுவாரசிய தகவலை பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.
ஏன், அவ்வாறு செய்தார் என்றால், தனக்கு நான்கு பிள்ளைகள் இருப்பது தெரிந்தால், இவருக்கு 4 பிள்ளைகளா, வயது என்ன? என்று கேள்விகள் வரும் என்ற ஒரு காரணத்துக்காக ரேஷன் கார்டில் இரண்டு பிள்ளைகள் என்று காட்டினாராம். அவருக்கு 3 பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு பயன் இருக்கிறராம். இருந்தாலும், 4 பிள்ளைகளுக்கும் திருமணம் முடிந்து விட்டதாம், சிம்புளாக தனது 4 பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்து வைத்துள்ளார் இது ஒரு பாராட்ட கூடிய விஷயம் என்று மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வடிவேலு தற்போது இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படம் வரும் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அவரது நடிப்பில் நீண்ட நாட்கள் கழித்து ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் கை கொடுக்கவில்லை என்றாலும், மாமன்னன் தகுந்த வெற்றியை எடுத்து கொடுக்கும் என நம்பப்படுகிறது.
