நடிகை வாணி போஜன் சமீபகாலமாக அதிரடி ஆக்சன் இருந்த திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக இவருடைய நடிப்பில் மிரல் , செங்கலம் ஆகிய படங்கள் வெளியானது. ஆனால் ஓ மை கடவுளே திரைப்படத்திற்கு பிறகு அந்த மாதிரி கதை அம்சம் கொண்ட ஒரு திரைப்படத்தில் கூட வாணிபோஜன் நடிக்கவில்லை. ஓ மை கடவுளே படங்களுக்கு பிறகு த்ரில்லர், ஆக்சன் ஆகியவற்றை கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.

Vani Bhojan [Image Source : Twitter /@vanibhojanoffll]
இந்நிலையில். எதற்காக அந்த மாதிரி படங்களில் நடிக்கவில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வாணி போஜனிடம் தொகுப்பாளர் கேட்டார். ” அதற்கு பதில் அளித்த வாணிபோஜன் ” எதற்காக எனக்கு ஆக்சன் படங்கள் வருகிறது என்று தெரியவில்லை. நானும் காதல் கலந்த ரொமான்டிக் படங்களில் நடிக்க ஆர்வமாக காத்திருக்கிறேன்.

Vani Bhojan [Image Source : Twitter /@vanibhojanoffll]
என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் பலரிடமும் அந்த மாதிரி கதைகளை தான் கொண்டு வர சொல்கிறேன். ஆனால் எனக்கு இன்னும் அந்த மாதிரி கதைகள் வரவில்லை. ஆனால் இந்த பாயும் ஒளி நீ எனக்கு படம் சற்று வித்தியாசமாக இருக்கும். இதுவரை நான் நடித்த படங்களில் இந்த திரைப்படம் ஆக்சன் கலந்த காதல் திரைப்படம் ஆக இருக்கும்.

Vani Bhojan [Image Source : Twitter /@vanibhojanoffll]
பொதுவாக எனக்கு ஒரு படத்தில் ஸ்கோப்ப இல்லை என்றால் அதில் நான் என் சும்மா வந்துட்டு போகவேண்டும் என்று நடிக்க மாட்டேன். ஆனால் இந்த திரைப்படத்தின் கதையை கேட்டுக்கும்போதே எனக்கும் மிகவும் பிடித்துவிட்டது. எனக்கும் படத்தில் நல்ல ஸ்கோப் இருந்தது அதனால் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளேன். படத்தை கண்டிப்பாக பாருங்கள்” என தெரிவித்துள்ளார்.
Related