Connect with us

News

ஜவான் படத்தில் சொதப்பிய அனிருத்…செம கடுப்பில் இயக்குனர் அட்லீ.!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான். இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, பிரியாமணி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

Shah Rukh Khan in Jawan poster

Shah Rukh Khan in Jawan poster. [Image Source: Twitter]

இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு படம் சில காரணங்களால் அக்டோபர் மாதம் வெளியாகும் என தகவல்கள் பரவியது.

இதையும் படியுங்களேன்- சேலையை அட்ஜெஸ்ட் செய்வதை கூட ஜூம் பண்ணி எடுக்குறாங்க…நடிகை வாணிபோஜன் வேதனை.!

Anirudh Ravichander 1

Anirudh-Ravichander [Image Source: Google]

இதனையடுத்து, படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்ல காரணம் என்னவென்பது குறித்த தகவல் தற்போது வெளியாகிஉள்ளது.  அதன்படி இந்த படத்தின் பின்னணி இசை பணிகளை முடிக்க சிறிது காலம் வேண்டும் என அனிருத் கூறியுள்ளாராம்.ஏனென்றால், அவர் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

aniruthu

Anirudh-Ravichander [Image Source: Google]

இதன் காரணமாகவே ஜவான் படத்தின் இசை பணியை முடிக்க சிறிய காலம் வேண்டும் என்பதற்காக அனிருத் அட்லீயிடம் கொஞ்சம் நாள் கேட்டுள்ளாராம். மேலும் அனிருத் தற்போது லியோ, இந்தியன் 2, NTR 30 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top