Connect with us

News

உடல் எடையை குறைத்து வேற லெவலுக்கு மாறிய அனுஷ்கா…! விரைவில் தரமான ரீ- என்ட்ரி…?

உடல் எடையை குறைத்து வேற லெவலுக்கு மாறிய அனுஷ்கா…! விரைவில் தரமான ரீ- என்ட்ரி…?

நடிகை அனுஷ்கா ஷெட்டி  ஒரு காலகட்டத்தில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர். இவரது நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Anushka Shetty

Anushka Shetty [Image Source: Google]

இந்த படத்தில் அவர் நடித்து கொண்டிருந்த போது அவருடைய உடல் எடை அதிகமாக இருந்தது, எனவே படத்தில் எடிட் தான் செய்திருந்தார்கள். பாகுபலி படத்தில் நடிப்பதற்கு முன்பு நடிகை அனுஷ்கா ஆர்யாவுக்கு ஜோடியாக இஞ்சு இடுப்பழகி எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக தான் அவர் உடல் எடையை ஏற்றினார்.

இதையும் படியுங்களேன்- ஐயோ ரொம்ப அழகு…தளபதியை ரசிக்கும் ராஷ்மிகா.! வைரலாகும் வீடியோ…

Anushka Shetty

Anushka Shetty [Image Source: Google]

இந்த படத்தில் நடித்தால் தனக்கு மார்க்கெட் உயரும் என்ற நோக்கில் தவறான முடிவை நடிகை அனுஷ்கா எடுத்திருந்தார். ஏனென்றால், இந்த படத்தின் மூலமே அவருக்கு சற்று மார்க்கெட் சரிந்துவிட்டது.  அவர் உடல் எடை அதிகரித்து இருந்ததால் பலரும் அவரை படத்தில் நடிக்க வைக்க யோசித்தனர்.

Anushka Shetty

Anushka Shetty [Image Source: Google]

 இந்த நிலையில், மிகவும் கடின முயற்சி செய்து நடிகை அனுஷ்கா தனது உடல் எடையை குறைத்துவிட்டாராம். மேலும் விரைவில் ஒரு சூப்பரான படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தான் அனுஷ்கா சமீபகாலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிடவில்லையாம். ஒரு படத்தின் மூலம் தன்னுடைய புதிய அழகை ரசிகர்களுக்கு காட்ட திட்டமிட்டுள்ளாராம். எனவே அவருடைய ரீ-என்ரியை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Continue Reading
To Top