Connect with us
director vikraman about vijay

News

விஜய் நடித்த எந்த படமும் நான் பாக்கல…பிரபல இயக்குனர் விக்ரமன் ஓபன் டாக்…

ஆரம்ப காலகட்டத்தில் பல தடைகளை தாண்டி தற்போது தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக இருக்கும் விஜய்யை பற்றி  பல பெரிய இயக்குனர்கள் பெருமையாக பேசுவது உண்டு. அப்படி விஜயை வைத்து பல ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரமன் சமீபத்திய  பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசி சில விஷயங்களை  பற்றி பேசி உள்ளார்.

vijay

vijay [Image Source : Twitter /@ActorVijayFP]

இது குறித்து பேசிய இயக்குனர் விக்ரமன் விஜய் நடித்த எந்த திரைப்படமும் நான் பார்த்ததே இல்லை. அதாவது பூவே உனக்காக திரைப்படத்திற்கு முன்னாடி வரை அவர் நடித்த எந்த திரைப்படங்களையும் நான் பார்த்ததே இல்லை. அவருடைய பாடல்கள் ரசிகன் படத்தில் இடம்பெற்ற பாடல்களில் அவர் நடனமாடியதை  பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிடித்தது.  அவர் நல்ல நடிகராக இருப்பார் என்று தான் என்னுடைய படத்திற்கு தேர்வு செய்தேன்.

vikraman director

vikraman director [Image Source : File Image ]

அவரை படத்தில் போட்ட பிறகுதான் தெரிந்தது அவர் தலைசிறந்த நடிகன் என்று. சண்டை காட்சிகள் என்றால் டூப் போடாமல்  விஜய் தான் செய்வார். பூவே உனக்காக படத்தில் ஒரு சண்டை காட்சி எடுத்தேன். அந்த சண்டைக்காட்சி  படத்தில் வராது. சண்டை காட்சி அவர வைத்து தான் எடுத்தேன் அந்த சண்டைக்காட்சியில் டூப்  போடாமல் அவரே தான் நடித்தார்.

vikraman about vijay

vikraman about vijay [Image Source : File Image ]

விஜய் நடனமும் அருமையாக ஆடுவார். சிக்லெட் சிக்லெட்  என்ற பாடலில் குதிரை வேகமாக வந்து கீழே இறங்கும் காட்சி அமைந்திருக்கும்.  அந்த காட்சிகளில்  டூப் போடாமல் அவரே தான் நடித்தார். பூவே உனக்காக அவருடைய 5-வது படமோ 6-வது படமோ தான். ஆனால் 100 படங்கள் நடித்ததை போல ஒரு அனுபவம் வாய்ந்த நடிகராக அந்த படத்தில் நடித்திருந்தார்.

thalapathy vijay

thalapathy vijay [Image Source : File Image ]

இதையும் படியுங்களேன்- அஜித் தொப்பையை காட்டிட்டு நடிப்பாரு…அவரு பெரிய பிராடு…பரபரப்பை கிளப்பிய கமல் பட தயாரிப்பாளர்.!!

அவருடைய நடிப்பை பார்த்து அந்த சமயமே நான் வியந்து விட்டேன். அப்பவே அங்கிருந்த எல்லாரிடமும் சொல்வேன் இவர் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக வருவார். இவரை படங்களில் கமிட் செய்து வைத்துக்கொள்ளுங்கள் என்று. அதைப்போலவே விஜய் பெரிய ஸ்டாராக மாறிவிட்டார்” என விஜயை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் இயக்குனர் விக்ரமன். இந்த தகவலை பார்த்த விஜய் ரசிகர்கள் நீங்கள் சொல்வது சரிதான் என கூறி வருகிறார்கள்.

Continue Reading
To Top