Gossips
ஏப்ரல் 14 ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு நிறைவு.! ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா.?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும், ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு இந்தியாவில் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க, நெல்சன் இயக்கி வரும் இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.
ஒரு தககளின்படி, ஜெயிலர் படப்பிடிப்பு ஏப்ரல் 15க்குள் முழுமையாக முடிந்து விடும் என்றும், அதன் பின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் சில நாள் படப்பிடிப்பு எஞ்சியுள்ளது, அதிலும் ஜினிகாந்த் படக்குழுவுடன் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் ஈடுபடவுள்ளார்.
இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த ஒட்டு தகவலின் படி, ஏப்ரல் 15க்குள் முழு படப்பிடிப்பும் முடிகிறது என்றால், ஆகஸ்ட் 15க்குள் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறதாம்.
இதையும் படிங்களேன் – கமலுடன் நீச்சல் உடையில் இருக்கும் பிரபல நடிகைகள்.! இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படம்…
இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற ஜெயிலராக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில், ரஜினிகாந்த் தவிர மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா, விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஜாபர் சாதிக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
