Connect with us

News

ஜெய் ஹோ..! இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நன்பர்களுக்கு ஆஸ்கர் நாயகன் பாராட்டு….

ஏஆர் ரஹ்மான் ஆரம்பத்திலிருந்தே RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல் 2023 ஆஸ்கர் விருதினை வெல்லும்என்பதில் உறுதியாக இருந்தார். அவர் அடிக்கடி தனது ட்வீட் மற்றும் பேட்டிகளில் அதை வெளிப்படுத்திருக்கிறார். இந்நிலையில், ஆஸ்கார் 2023ல் இந்தியா ஒன்றல்ல இரண்டு விருதுகளை வென்றதால், ஏஆர் ரஹ்மான் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

Oscar Awards 2023 RRR AND The Elephant Whisperers

Oscar Awards 2023 RRR AND The Elephant Whisperers [Image Source : Twitter]

RRR-ன் ‘நாட்டு நாடு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதினையும், கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்காவின் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ சிறந்த ஆவணப்பட குறும்படப் விருதினையும் வென்றுள்ளது. தற்போது, ஏ.ஆர்.ரஹ்மான் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு படங்களுக்கும் வாழ்த்து தெரிவிதுள்ளார்.

a.r.rahman

தனது ஸ்டைலில், ஜெயஹோ என்று குறிப்பிட்டு இரண்டு படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்.

இதையும் படிங்களேன் – ஆஸ்கரை வென்ற இரு படக்குழுவுக்கும் தலை வணங்குகிறேன்.! ரஜினிகாந்த் ட்வீட்…

a.r.rahman oscar award [Image Source : Twitter]

இதற்கிடையில், ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக (சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடல்) இரண்டு முறை ஆஸ்கார் விருது பெற்றுள்ளார்.

Continue Reading
To Top