Connect with us
arjun sarja and aishwarya

News

மகளுக்காக படாத பாடு படும் அர்ஜுன்…இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ…

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா தமிழில் பட்டது யானை திரைப்படத்தில் மட்டும் தான் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் தெலுங்கு பக்கம் முழுவதுமாக சென்றுவிட்டார். தெலுங்கிலும் அவருக்கு சொல்லும்படி, பெரிய படவாய்ப்புகளும் கிடைக்கவில்லை.  பட வாய்ப்பு வரவேண்டும் என்ற காரணத்தால் ஐஸ்வர்யா அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார.  அப்படி இருந்தும் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Actress Aishwarya Arjun

Actress Aishwarya Arjun [Image Source : Twitter /@nettv4ukannada]

இதனால் அர்ஜுனை களத்தில் இறங்கி தனது மகளை ஹீரோயினாக  வைத்து தெலுங்கில் ஒரு திரைப்படம் இயக்கினார். அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் விஷ்வக் சேனையை வைத்து எடுத்து வந்தார்.  பிறகு விஷ்வக் சேனைக்கும் நடிகர் அர்ஜூனுக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படத்தில் இருந்து விஷ்வக் சேனை விலகினார்.

Aishwarya Arjun

Aishwarya Arjun [Image Source : Twitter /@SureshPRO_]

படமும் பாதியில் நின்றது. இதனையடுத்து,  தற்பொழுது தன்னுடைய மகளை முன்னணியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் அர்ஜுன் அந்த திரைப்படத்தை மீண்டும் இயக்க முடிவு எடுத்துள்ளாராம்.   விஷ்வக் சேனாவுக்கு பதிலாக வேறு ஒரு ஹீரோவை வைத்து அந்த திரைப்படத்தை எடுக்க நடிகர் அர்ஜுன் இயக்க முடிவு செய்துள்ளாராம்.

arjun daughter

arjun daughter [Image Source : File Image ]

மேலும், ஏற்கனவே ஒரு ஹீரோ வைத்து இந்த திரைப்படத்தை அர்ஜுன் இயக்கி  வந்த நிலையில், அந்த படம் பாதியில் நின்றது. மீண்டும் அர்ஜுன் தற்போது அந்த படத்தை தொடங்க உள்ளதாக பரவும் தகவல்கள் பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ என கூறி வருகிறார்கள். மேலும் அர்ஜுன் தனது மகளை வைத்து இயக்கி வரும்  இந்த திரைப்படத்தின் கதை குறித்த  தகவலும் தற்போது கிடைத்துள்ளது.

Aishwarya Arjun garu

Aishwarya Arjun garu [Image Source : Twitter /@TollywoodWishes]

அது என்னவென்றால், படத்தின் கதைப்படி நடிகை ஐஸ்வர்யா ஹீரோ உடன் சண்டை போட்டு ஊருக்கு செல்லும் விமானத்தை தவற விடுகிறார.  அந்த விமானம் செல்லும் வழியில் விபத்து ஆகிறது. இந்த தகவலை பார்த்த ஹீரோயின் ஐஸ்வர்யா தன்னை விமானத்தில் செல்ல தடுத்தவர்கள் அனைவருக்கும் தேடித் தேடி நன்றியை கூறுகிறார் பிறகு ஹீரோவிடமும் நன்றி கூறுவாரும்” இதை மையமாக வைத்து தான் கதை நகருகிறது என தகவல்கள் கிடைத்துள்ளது.

Continue Reading
To Top