News
அர்ஜுன் மகளை காதலிக்கும் தம்பி ராமையா மகன்….திருமணம் செய்து வைக்க துடிக்கும் 2 குடும்பம்…
சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் தங்களுடைய குடும்பத்தில் இருக்கும் வாரிசுகளை அதே சினிமாத்துறையில் இருக்கும் பிரபலங்களின் வாரிசுகளுக்கு திருமணம் செய்து வைத்து சொந்தமாகி கொள்ளவது சாதாரண ஒரு விஷயம் தான். இதுவரை சினிமாவில் அப்படி எத்தனையோ பேர் தங்களுடைய மகன்கள், மகள்களை திருமணம் செய்துகொடுத்து சொந்தமாக ஆகி இருக்கிறார்கள்.

arjun and aishwarya arjun [Image Source : File Image ]
அப்படி தற்போது அந்த வரிசையில் கோலிவுட் சினிமாவில் இரண்டு நடிகர்கள் சம்பந்திகளாக மாறபோறார்களாம். அவர்கள் வேறு யாருமில்லை நடிகர் அர்ஜுனும், நடிகர் தம்பி ராமையாவும் தான். ஆம், தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவும், அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வருகிறார்களாம். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளார்களாம்.

aishwarya arjun and Umapathy Ramaiah [Image Source : File Image ]
இவர்கள் இருவரும் காதலிக்கும் தகவல் இரண்டு குடும்பங்களுக்கும் தெரிய வர, திருமணத்திற்கான பேச்சுவார்தையையும் இருதரப்பு குடும்பங்களும் பேசிமுடிவெடித்துவிட்டார்களாம். எனவே, விரைவில் ஒரு நல்ல நாள் பார்த்து இருவருக்கும் திருமணம் செய்துமுடித்து கொடுக்க இரண்டு குடும்பங்களும் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Umapathy Ramaiah and aishwarya arjun [Image Source : File Image ]
இன்னும் இந்த தகவல் உறுதியாகவில்லை, திருமண தேதி உறுதியான பிறகு தான் அர்ஜுன் மற்றும் அவருடைய குடும்பம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த தகவலை பிரபல பத்திரிகையான வலைப்பேச்சு தங்களுடைய யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்கள். இது வதந்தியா..? அல்லது உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

arjun sarja family [Image Source : File Image ]
மேலும், அர்ஜுன் தனது மகள் ஐஸ்வரியாவை வைத்து ஒரு படத்தை இயக்கி தயாரித்து வந்தார். அந்த திரைப்படத்தில் இருந்து ஹீரோ விலகிய நிலையில், படம் பாதியில் நின்றது. இதனையடுத்து, மீண்டும் அந்த படத்தை தொடங்க நடிகர் அர்ஜுன் திட்டமிட்டுள்ளாராம். மேலும்,அதற்கான வேளையில் தான் தற்போது அர்ஜுன் மும்மரமாக ஈடுபட்டு வருகிறாராம்.
