முதலில் சூர்யா… அப்புறம் அதர்வா.! இப்போ அருண் விஜய்.? குழப்பத்தில் பாலா….
இயக்குனர் பாலா இயக்கி வரும் வணங்கான் படத்தில் ஹீரோவாக நடிப்பதிலிருந்து நடிகர் சூர்யா விலகுவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால், இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்புகளும் நடைபெற்றதும் இல்லாமல், சூர்யாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதன் காரணமாக, நடிகர் சூர்யாவுக்கு பிடிக்கமால் விலகியதாக கூறப்படுகிறது. அனாலும், இயக்குனர் பாலா இந்த படம் தயாரிப்பில் தான் இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிகர் அதர்வாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இப்படம் குறித்த தற்போதய சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், நடிகர் அருண் விஜய்யை வணங்கான் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. மேலும், இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்களேன் – நயன்தாரா முதல் சௌந்தர்யா ரஜினிகாந்த் வரை.! 2022-ல் அம்மாவான பிரபல நடிகைகள்…
இருப்பினும், இது குறித்து இயக்குனர் பாலா அதிகாரப்பூர்வ அறிவிக்கவில்லை. இதனால், பெரும் குழப்பத்தில் இயக்குனர் பாலா இப்போ சிக்கியுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. மேலும், இப்படத்தை சூர்யா தயாரிப்பதாக இருந்த வணங்கான் படத்தை விட்டு விலகியதால் புதிய தயாரிப்பு பேனர் குறித்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை இதற்கிடையில், இந்த படத்தில் நடிகை கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
