Connect with us
rekha nair

News

18 வயதிலே குழந்தை 3 முறை தற்கொலை செய்துகொள்ள நினைத்த நடிகை ரேகா.! வெளியான பகீர் தகவல்…!

இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான ரேகா சமீபத்திய பேட்டி ஒன்றில் ” நான் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு முதல் ஆண்டு கல்லூரி சென்றுகொண்டிருந்த சமயத்தில் தான் எனக்கு திருமணம் முடிந்தது. அந்த திருமண வாழ்கை சிக்கீரமாகவே முறிந்தது. அதாவது முதல் கணவரை நான் விவாகரத்து செய்துவிட்டேன். பிறகு சமீபத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் நான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன்.

rekha sivan

rekha sivan [Image Source : Instagram/@rekhaasivan66]

எனக்கு முதல் திருமணம் நடந்த போது அது என்னால் எதை பற்றியும் யோசிக்க முடியாத வயது. என்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கு காதல் செய்து திருமணம் செய்யவேண்டும் என்கிற எண்ணம் வரவே இல்லை. ஏனென்றால் நான் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம்.நானும் பேப்பர் எல்லாம் போட்டு ரொம்பவே கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். அந்த சமயத்தில் என்னுடைய குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டும், அதற்காக எதாவது படித்து வேலைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் என்னுடைய மனதில் இருந்தது.

rekha sivan

rekha sivan [Image Source : Instagram/@rekhaasivan66]

அந்த ஒரு காரணத்தால் மட்டும் தான் என்னுடைய தந்தை யாரை சொன்னாலும் திருமணம் செய்துகொள்ளலாம் என திருமணம் செய்தேன். முதல் திருமணம் முடிந்து ஒரு 18 ,19 வயது சமயத்தில் எனக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறக்கும்போதே என்னுடைய முதல் கணவர் என்னுடன் இல்லை பிரிந்து சென்றுவிட்டார். குழந்தை பிறந்ததை என் கண் முன்னே நானே பார்த்தேன். எத்தனை மணிக்கு பிறந்தது என்பதையும் கடிகாரத்தை பார்த்துகொன்டே இருந்தேன். இந்த மாதிரி பல விஷயங்களை நான் என்னுடைய வாழ்க்கையில் பார்த்துள்ளேன்.

rekha sivan

rekha sivan [Image Source : Instagram/@rekhaasivan66]

எனக்கு குழந்தை பிறந்த சமயத்தில் என்னுடைய அம்மா அப்பா கேரளாவில் இருந்தார்கள். என்னுடைய அப்பா அம்மாக்கு தமிழ் தெரியாது. நான் இங்கு இருந்து எனக்கு குழந்தை பிறந்துள்ளது என ஒரு கடிதத்தில் எழுதி அனுப்பினேன். என்னுடைய தம்பிக்கு தமிழ் தெரியும் அவன்தான் இந்த விஷயத்தை என்னுடைய பெற்றோர்களிடம் தெரியப்படுத்தினான். அதன்பிறகு என்னுடைய அம்மாவும், அப்பாவும் வந்து குழந்தையை வாங்கிக்கொண்டு சென்றார்கள்.

rekha sivan

rekha sivan [Image Source : Instagram/@rekhaasivan66]

இதையும் படியுங்களேன்- ராங்கு பண்ணிய ராம்கி.? தாலி கட்டாமல் நடிகையுடன் குடும்ப நடத்திய சம்பவம் அம்பலம்.!

நான் சிறிய வயதில் இருந்த அன்னை தெரசாவாகவே வாழ்ந்துவிட்டேன். என்னுடைய கண்கள் முன்னாடி ஏதேனும் பிரச்சனைகள் நடந்தால் அதனை தட்டிக்கேட்பேன். நான் சோர்வாக இருந்த சமயத்தில் 3 முறை தற்கொலை செய்துகொள்ள துணிந்தேன். ஆனால், தற்கொலை செய்வது சுலபம் வாழ்வது கடினம் வாழ்ந்து காட்டுவது தான் கெத்து’ எனவும் தெரிவித்துள்ளார். இவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் உங்கள் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா..? கவலை படாதீங்க என ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

Continue Reading
To Top