Video: 30 வயதில் வில் அம்பு போல் உடலை வளைத்து யோகாவில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்.!
நடிகை கீர்த்தி சுரேஷ், நடிப்பில் தற்போது மாமன்னன் படத்திலும், தசராபோலா, சங்கர் ஆகிய தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விரைவில் மாமன்னன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
கீர்த்தி சுரேஷ், பொதுவாக சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவ்வவ்போது பதிவிடுவது வழக்கம். சமீபத்தில், யோகா செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவைப் பகிர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ், “அனைத்து பதட்டங்களையும் விலக்கி வைப்பது” தனது ரகசியம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
View this post on Instagram
சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் தனது உடல் மற்றும் மன நலனைப் பற்றி கவனித்து வருகிறார். மேலும், அவரை பதற்றத்தில் இருந்து விலக்கி வைக்க யோகா தான் தனது ரகசியம் என்று வெளிப்படையாக உறுதி அளித்துள்ளார். இந்த வீடியோவில், அவர் தனது 30 வயதிலும் மிகவும் இளமையாக இருப்பது யோகா செய்திருக்கிறார், இப்பொது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது.
இதையும் படிங்களேன் – காதலனுடன் அந்த மாதிரி இருக்கும் போட்டோவை கசிய விட்ட ஸ்ருதி ஹாசன்.! திகைப்பில் ரசிகர்கள்.!
இதற்கிடையில், கீர்த்தி சுரேஷு ‘கேஜிஎஃப்’ தயாரிப்பாளர்களின் முதல் தமிழ் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த படத்துக்கு ‘ரகுதாதா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், கீர்த்தி சுரேஷிடம் தெலுங்கில் தசரா மற்றும் போலா ஷங்கர் ஆகிய படங்கள் கையிருப்பில் உள்ளது.
